சென்னையை மிரட்டும் கனமழை.., நள்ளிரவே நேரில் சென்று ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
உதயநிதி ஆய்வு
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்ப்பினராக இருக்கும் போதே மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொன்டு வந்தார்.
இதையடுத்து, அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்த நிலையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, களத்தில் நேரடியாக இறங்கி பணிகளை செய்வது போன்ற விடயங்களில் மும்முரமாக இருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு பெய்த கன மழை தற்போது வரை பெய்து கொண்டிருக்கிறது. இதனால், கனமழை முன்னெச்சரிக்கைக்கான பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் நேற்று இரவு சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் திருவல்லிக்கேணியில் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவல்லிக்கேணியில் சாலைகளில் நடந்து சென்றும், துப்புரவு பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியும் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |