வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்து வரப்பட்ட பணம் - வைரலாகும் வீடியோ
மழை வெள்ளத்தில் ஒருவரின் வீட்டிற்குள் பணம் அடித்து வரப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்து வரப்பட்ட பணம்
கடந்த சில நாட்களாக மும்பை உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து நகரங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டது.

தெருக்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஓடத்தொடங்கி, பலரின் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
இதில், ஒருவரின் வீட்டிற்குள் ஏராளமான பணத்தாள்கள் அடித்து வரப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடவுளின் திட்டம் எனப்பெயரிடப்பட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், “பணம் உங்களைத் தேடி வரும் என்பது நிஜம்”, “பணமழை பொழிகிறது” என பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் எந்த பகுதியில் நடைபெற்றது எந்த விவரங்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.
இதே போல், ராய்காட் மாவட்டம் சாவ்ணே பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், வெள்ளத்தில் அங்கிருந்த சுமார் 3000 LPG சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஆற்றங்கரையோரங்களில் மிதந்து வந்த சிலிண்டர்களை பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |