வரும் 22ஆம் திகதி உருவாகும் புதிய காற்றழுத்தம்.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் வரும் 22ஆம் திகதியான சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கடக் கடலில் வரும் 22ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், அது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55km வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |