உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
"தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக இன்று முதல் 10ஆம் திகதி வரை மழை பெய்யும்.
குறிப்பாக நவம்பர் 8ஆம் திகதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுமை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வட தமிழக கடலோர பகுதியில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |