தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகை நாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 15ஆம் திகதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |