தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |