தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 5 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வருகின்ற 17ஆம் திகதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதற்கடுத்து வருகின்ற 18ஆம் திகதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், வருகின்ற 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |