தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50km வேகத்தில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 3ºC வரை அதிகரித்து காணப்படும், நாளை முதல் இயல்பை ஒட்டியே இருக்கும்.
அதேபோல், சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 104ºF வரை இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |