அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை- வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று 29.10.2024 மற்றும் நாளை 30.10.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோன்று தீபாவளி அன்று (31.10.2024) தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |