புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.., தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாக்குவதால் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..
வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதன்படி நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக இருப்பதை ஒட்டி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |