தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது
48 மணி நேரத்தில் சுமார் 44 சென்டிமீட்டர் மழை பெய்ததால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ANI
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் தேதி கோவை மற்றும் நீலகிரியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
9ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |