தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன்காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னயை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கீழ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |