தமிழகத்தில் அடுத்த மாதம் தீவிர மழைப்பொழிவு இருக்கும்.., வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை
ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பிற்கு எஞ்சிய மழைப்பொழிவு பதிவாகும் என்று டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பிற்கு எஞ்சிய மழைப்பொழிவு பதிவாகும்.
குறிப்பாக முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும். கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது.
குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக கூடும். இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழகம் & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடிமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |