உருவாகும் குறைந்த காற்றழுத்தம்.., 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனால், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |