73 செ.மீ வரை குவிந்துள்ள பனி! அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு
அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் கடுமையான பனிப்பொழிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் மற்றும் பென்சில்வேனியா போன்ற மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக சாலைகள், ரயில் பாதைகள் முழுவதும் பனி மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனி குவிந்துள்ளதால், பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |