பிரான்சின் பெரும்பாலான பகுதிகளை துவம்சம் செய்ய இருக்கும் கடும் புயல்கள்: வானிலை எச்சரிக்கை
பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இன்று கடும் புயல்கள் துவம்சம் செய்ய இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
பிரான்சின் தென்மேற்கு பகுதி முதல் வடகிழக்கு பகுதிவரையிலான பெரும்பாலான பகுதிகளை, இன்று சனிக்கிழமை, புயல்கள் துவம்சம் செய்ய இருப்பதாக பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் 19 பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது, வானிலையில் இரண்டாவது உயர் மட்ட எச்சரிக்கையாகும்.
இன்று, முதலில் தெற்கு மற்றும் தென்மேற்கு பிரான்சில் துவங்கும் புயல், 30 முதல் 50 மில்லிமீற்றர் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையாக பொழிய இருக்கிறது.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, இன்று மதியம்வாக்கில் பரவ இருக்கும் புயல்கள், மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்றையும் கொண்டுவர உள்ளன.
@VigiMeteofrance 23 août
— VigiMétéoFrance (@VigiMeteoFrance) August 23, 2024
Pour vendredi 23 août 2024 :
Pour samedi 24 août 2024 :
? 19 départements en Vigilance orange
Restez prudents et informés :https://t.co/JGz4rTUvHP pic.twitter.com/K8mLSzrY0t
மாலைவாக்கில், வடக்கிலிருந்து அடிக்க இருக்கும் மழை, தெற்கிலிருந்து வீசும் புயலுடன் இணைந்து, இரவில் பல இடங்களில் பெரும் புயலாக உருமாற உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |