ஐரோப்பாவின் பசுமை தலைநகரமாக ஜேர்மன் நகரம் தெரிவு
ஐரோப்பாவின் பசுமை தலைநகரமாக ஜேர்மன் நகரமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய பசுமை நகர விருதை ஜேர்மனியின் ஹெயில்ப்ரோன் நகரம் (Heilbronn) வென்றுள்ளது.
லிதுவேனியாவின் தேசிய க்ளிக் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில், இந்த நகரம் காற்றின் தரம், நீர் மேலாண்மை, குறைந்த சத்தம், காலநிலை மாற்ற தழுவல் மற்றும் அதன் சுழற்சி பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்த மதிப்பீடுகளைப் பெற்றதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஹெயில்ப்ரோன் நகரம், Landscape Plan 2030 மற்றும் Mobility Concept ஆகிய திட்டங்களின் மூலம், சத்தம் மற்றும் காற்றின் தரத்தை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்தும் நகர திட்டமிடலுக்காக பாராட்டப்பட்டது.
2035-ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகள் ஆகியவை நகரத்தின் பசுமை முயற்சிகளை வலுப்படுத்துகின்றன. இதற்காக 600,000 யூரோ பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
சிறிய நகரங்களுக்கு வழங்கப்படும் Green Leaf Award விருது, நெதர்லாந்தின் Assen மற்றும் இத்தாலியின் Siena மகரங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதுகள், நகரங்களை பசுமையாக மாற்றி உருவாக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Heilbronn Green Capital 2027, European Green Cities Award, Germany sustainable cities, Heilbronn, EU Green Leaf Award winners, Assen Siena green city award