ரூ 125 லட்சம் கோடி சொத்துக்களுக்கு யார் வாரிசு.... தயாராக இருக்கும் அம்பானி, அதானி
இந்திய நிறுவனங்கள் பல மிகப்பெரிய வணிக வளர்ச்சியைக் காணும் நேரத்தில், பெருநிறுவன உலகில் இந்த நேரத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அடுத்த தலைமுறை
நாட்டின் முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தற்போது தங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கத் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் முழுவதும், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரியல் எஸ்டேட், ஐடி மற்றும் எஃப்எம்சிஜி போன்ற பெரிய தொழில்களை தற்போது புதிய கைகளுக்குச் செல்லப் போகின்றன.
2024 மற்றும் 2030 க்கு இடையில், சுமார் 1.5 டிரில்லியன் டொலர் (சுமார் ரூ.125 லட்சம் கோடி) மதிப்புள்ள சொத்துக்கள், கவுதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ஷிவ் நாடார் ஆகியோரின் குடும்பங்கள் உட்பட அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கௌதம் அதானி தமது 70 வயதில் ஓய்வு பெறுவதாகவும், தனது தொழிலை நான்கு வாரிசுகளுக்குப் பிரிப்பதாகவும் முடிவு செய்துள்ளார். மகன்கள் கரண் மற்றும் ஜீத் மற்றும் மருமகன்கள் பிரணவ் மற்றும் சாகர் ஆகியோருக்கு வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பரஸ்பர ஒப்புதல்
வெளியான தகவலின் அடிப்படையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2023 ஆம் ஆண்டில் தனது மூன்று பிள்ளைகளையும் இயக்குநர்கள் குழுவில் சேர்த்துள்ளார்.
இஷா அம்பானிக்கு சில்லறை வணிகப் பொறுப்பும், ஆகாஷ் அம்பானிக்கு ஜியோவும், அனந்த் அம்பானிக்கு பசுமை எரிசக்தியும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 127 ஆண்டுகள் பாராம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம் 2024 ஆம் ஆண்டில் பரஸ்பர ஒப்புதலின் பேரில் மொத்த வணிகத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தது.
HCL நிறுவனர் ஷிவ் நாடார் தனது மொத்த நிறுவனங்களையும் மகள் ரோஷ்னி நாடரிடம் ஒப்படைத்துள்ளார். ரோஷ்னி தற்போது HCL டெக்னாலஜிஸின் தலைவராகவும் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |