சவுதி பட்டத்து இளவரசருக்கு போடப்பட்ட கொரோனா தடுப்பூசி எந்த நிறுவனம் உருவாக்கியது? புகைப்படத்துடன் வெளியான தகவல்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என அந்நாட்டு அரசு ஊடகமான SPA செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் Pfizer/BioNTech இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் ஒப்புதல் அளித்தது.
டிசம்பர் 16 ம் தேதி சவுதி அரேபியா முதல் முறையாக Pfizer/BioNTech தடுப்பூசி டோஸ்களை பெற்றது, 1,00,000 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் Tawfiq Al Rabiah கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில், சவுதி சுகாதார அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது முதல் டோஸ் Pfizer/BioNTech கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
இளவரசர் சல்மானுக்கு இடது கையில் தடுப்பூசி போடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் Pfizer/BioNTech தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் Pfizer/BioNTech தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
