காட்டுத்தீயை அணைக்கும் பணியிலிருந்த ஹெலிகொப்டர்கள் மோதல்: அவசர அழைப்பு விடுப்பு
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹெலிகொப்டர்கள்
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள Psatha பகுதியில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டிருந்தன.
அப்போது அந்த ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இதனையடுத்து அவசரகால சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்புத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் யானிஸ் ஆர்டோபியோஸ், 'காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர்களால் தங்கள் வாகனங்களின் கதவுகளைக் கூட திறக்க முடியவில்லை' என்றார்.
இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த அவசரகாலக் குழுவினரின் உதவியுடன், சுமார் 500 கிரேக்க தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |