காட்டுப் பகுதிக்குள் நடந்த ஹெலிகாப்டர் விபத்து: 5 அமெரிக்கர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
Helicopter crash in Kenya 7 dead: கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
வடக்கு கென்யாவில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென விபத்துக்குள்ளானதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வன பாதுகாப்பு பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அதில் 6 பேர் பயணிகள் என்றும், அதில் 5 பேர் அமெரிக்கர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் சஃபாரி நிறுவனமான ட்ராபி ஏர் கென்யா, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக தங்களுடைய இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்து இருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |