சுவிஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலி
Helicopter Crash in Switzerland 3 Dead: சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் விமான விபத்து
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் சிறிய ரக சிர்ரஸ் எஸ.22t என்ற விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் சியான் விமான நிலையத்தில் இருந்து புறபட்டு 10வது நிமிடத்தில் விபத்தில் சிக்கியது
இந்த விபத்தானது திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மோதியதில் ஏற்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக 3 பேர் பலி
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தை அடுத்து ஹெலிகாப்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.
ம்பவ பகுதியில் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.