உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பக்தர்கள், ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழப்பு
Helicopter crash near Badrinath claims 6 lives: உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற இந்து வழிபாட்டு தலமான பத்ரிநாத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் 5 பக்தர்கள் மற்றும் ஒரு விமானியுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை ஹெலிகாப்டர் ஆனது இழந்தது.
இந்நிலையில் சாமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் ஆனது விழுந்து நொறுங்கி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் மற்றும் விமானி உட்பட 6 பேரின் உடலையும் மீட்பு படையினர் மீட்டு இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அதே நேரம் விபத்து தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விபத்திற்கு முன்னதாக சம்பவ இடத்தில் கடும் மழை மற்றும் புகை நிலவியதால் பார்வை தன்மை மிக குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.