மியாமியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: கடலோர காவல் படையினர் உறுதிப்படுத்திய தகவல்
Helicopter crash near Miami bay 1 killed: மியாமி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து
மியாமி அருகே பிஸ்கேன் வளைகுடாவில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 2 பேர் வரை இந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் ஆனது கீ பிஸ்கேன் பகுதிக்கு அப்பால் உள்ள பில் பேக்ஸ் மாநில பூங்காவிற்கு அருகே விபத்துக்குள்ளானதாக மியாமி டேட் ஷெரீப் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ராபின்சன் R44 II ஹெலிகாப்டர் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த எதிர்பாராத சம்பவம் அரங்கேறி இருப்பதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் அடையாளங்களை அதிகாரிகள் இன்னும் அடையாளம் காட்டவில்லை.