நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகள் நிலை கேள்விக்குறி!
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில்(Hudson River) விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா(Tribeca) பகுதியை நியூ ஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை(Holland Tunnel) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நியூயார்க் தீயணைப்புத் துறை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:17 மணிக்கு நதியில் ஹெலிகாப்டர் மூழ்கியதாக தகவல் பெற்றதை அடுத்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
பயணிகளின் நிலை கேள்விக்குறி
நியூ ஜெர்சி மாநில காவல்துறை அளித்த தகவலின்படி, பெல் 206L-4 லாங்ரேஞ்சர் IV ரகத்தைச் சேர்ந்த N216MH பதிவு எண் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி, இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்.
We’re following reports of a helicopter crash in the Hudson River between New York and New Jersey. At this time, based on ADS-B data and the location of SAR activity, we believe the aircraft involved to be N216MH, a Bell 206L-4 LongRanger IV.https://t.co/hp2b2oU5Vc pic.twitter.com/kGLiU7V6rc
— Flightradar24 (@flightradar24) April 10, 2025
விமானம் விபத்துக்குள்ளாகும் முன் சுமார் 15 நிமிடங்கள் பறந்ததாக Flightradar24 தளத்தின் விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.
உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |