சுற்றுலாப் பயணிகளின் தலை மேல் விழுந்த ஹெலிகாப்டர்: வெளியான திகில் வீடியோ காட்சிகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மியாமி கடற்கரையில் கூடி பொழுதை கழித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து கொண்டிருந்த பகுதிக்குள் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாக்கியது.
Near-miss helicopter crash on Miami beach https://t.co/r2vAQAfw1J pic.twitter.com/0iOlxuWpeQ
— BBC News (World) (@BBCWorld) February 20, 2022
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து உயிர் சேதம் ஏதும் ஏற்படுத்தாத நிலையில், அந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்களில் இருவர் உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த கடற்கரை பகுதியின் 9வது தெரு முதல் 11வது தெரு வரை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பெடரல் ஏவியேஷன் ஆணையமும் இந்த விபத்து குறித்து தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்றும், விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் வணிக தொடர்புடையதா அல்லது பயணிகள் ஹெலிகாப்டரா என்றும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் தலைக்கு மேல் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான அந்த வீடியோ பதிவை பொலிஸார் வெளியிட்டத்தை தொடர்ந்து இதை பார்த்து இணையவாசிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.