விமான நிலையத்திற்கு அருகே விழுந்து வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! அனைவரும் பலி: வெளியான பரபரப்பு வீடியோ
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று விமான நிலையத்திற்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் உள்ள லீஸ்பர்க் விமான நிலையத்திற்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
தீயணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துப்படும் BLACK HAWK ஹெலிகாப்டர், பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாயமான மற்ற 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான 3 பேரின் சடலங்களை கண்டறியும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்த ஹெலிகாப்டரின் பாகங்களை கண்டறிய தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினருக்கு பல மணிநேரம் ஆனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மரங்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
WATCH: A Black Hawk firefighting helicopter with four people on board crashed outside Leesburg, Florida during a training exercise on Tuesday. One person is confirmed dead, but no survivors are expected. pic.twitter.com/5WV57WjAjl
— CBS News (@CBSNews) May 26, 2021
எனினும், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து NTSB மற்றும் FAA விசாரணை நடத்தி வருகின்றனர்.