198 ரன்கள் இலக்கை தனியாளாக நின்று முடித்த கேப்டன்! 20 பந்தில் 47 ரன் விளாசல்
பிக்பாஷ் லீக் தொடரின் ௩௯வது போட்டியில் சிட்னி சிக்சர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
லாரி எவன்ஸ் விளாசல்
நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 197 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரி எவன்ஸ் 72 ஓட்டங்கள் விளாசினார்.
கூப்பர் 37 ஓட்டங்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
Coops ?
— KFC Big Bash League (@BBL) January 16, 2024
He's in the mood too! #BBL13 pic.twitter.com/IXOEqmO7Wk
பின்னர் வந்த ஜோஷ் பிலிப் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர் டேனியல் ஹுக்ஸ் அதிரடியாக 43பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்தார்.
அடித்து நொறுக்கிய மொய்சஸ் ஹென்றிக்ஸ்
கடைசி கட்டத்தில் கேப்டன் மொய்சஸ் ஹென்றிக்ஸ் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 20 பந்தில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார்.
Cometh the moment, cometh the captain ?@SixersBBL #BBL13 pic.twitter.com/2333QtY7rg
— KFC Big Bash League (@BBL) January 16, 2024
இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 201 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் பெஹரேண்டார்ப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
@BBL
CAPTAIN CLUTCH!
— KFC Big Bash League (@BBL) January 16, 2024
Moises Henriques with a HUGE six. #BBL13 pic.twitter.com/Ls1kGiH6jv
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |