வெளியான ராணியாரின் மரண செய்தி... வானத்தில் நடந்த மாற்றம்: உருகிய மக்கள்
அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்
ராணியார் மறைவை அடுத்து, இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூட இருக்கிறார்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணமடைந்த தகவல் வெளியான வேளையில் பக்கிங்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகியுள்ளது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியானதால், அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
@pa
இந்த நிலையில் சோகமான சூழலுக்கு ஏற்றவாறு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அங்கு மழை பெய்தது என்பதால் குளிர்ச்சியான வானிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் அங்கு திடீரென வானவில் தோன்றியது.
சரியாக பக்கிம்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் அங்கு தோன்றியது. இதை பார்த்ததும் அங்கு திரண்டிருந்த மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் முழக்கமிட்டனர்.
ராணியார் இரண்டாம் எலிசபெத் ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள பால்மோரல் அரண்மனையில் இயற்கை எய்தியுள்ளார். குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரணமனை உரிய முறைப்படி அறிவித்துள்ளது.
ராணியார் மறைவை அடுத்து, இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூட இருக்கிறார்.
தற்போது பால்மோரல் அரண்மனையில் தங்கியிருக்கும் சார்லஸ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அரச குடும்பத்து உறுப்பினர்கள் நாளை லண்டன் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.