சரும பொலிவை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு மா போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து நிறம் மங்குவதை ஏற்படுத்துகிறது.
பொதுவாக அனைவரும் தங்களின் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே சரும பொலிவை வேகமாக அதிகரிக்க மூலிகை குளியல் பொடி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பயறு- 1½ kg
- ரோஸ் இதழ்கள்- 200g
- வெட்டி வேர்- சிறிதளவு
- செம்பருத்தி- 200g
- கடலை பருப்பு- ½ kg
- பூலாங்கிழங்கு- 200g
- வேப்பிலை- சிறிதளவு
- கஸ்தூரி மஞ்சள் - 250g
பயன்படுத்தும் முறை
முதலில் பாசிப்பயறு, கடலை பருப்பை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் ரோஸ் இதழ்கள், பூலாங்கிழங்கு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் மூலிகை குளியல் பொடி ரெடி.
தினமும் குளிக்கும்பொழுது சோப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக மூலிகை குளியல் பொடியைப் பயன்படுத்தலாம்.
இந்த பொடி சருமத்தில் உள்ள பருக்கள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்குவதற்க உதவியாக இருக்கும்.
குறிப்பாக இந்த குளியல் போடி சூரிய ஒளியால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் இவை தடுக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |