பிரான்ஸ் சந்தையில் நுழைந்த Hero நிறுவனம் - Hunk 440 மொடல் அறிமுகம்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது 52வது சர்வதேச விரிவாக்கமாக பிரான்ஸ் சந்தையில் நுழைந்துள்ளது.
இதற்காக GD France நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இதன்மூலம் ஹீரோ நிறுவனம், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தனையவற்குப் பிறகு ஐரோப்பிய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துகிறது.
பாரிஸ் அருகே உள்ள UTAC Mortefontaine சோதனை மையத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், Euro 5+ தரச்சான்று பெற்ற மோட்டார் சைக்கிள்கள் வரிசை வெளியிடப்பட்டது.

இதில் முக்கியமாக Hunk 440 மொடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது A2 செயல்திறன் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 440cc என்ஜின் கொண்ட இந்த மாடல் 27 bhp சக்தியை 6,000 rpm-ல் மற்றும் 36 Nm டார்க் சக்தியை 4,000 rpm-ல் வழங்குகிறது.
Dual Channel ABS, KYB USD forks, LED விளக்குகள் மற்றும் Navigation வசதி கொண்ட டிஜிட்டல் TFT திரை ஆகியவை இதில் உள்ளன.
Twilight Blue மற்றும் Phantom Black என இரண்டு நிறங்களில் கிடைக்கும் இந்த மாடல், VAT உட்பட 3,599 யூரோ (சுமார் ₹3.7 லட்சம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2028-க்குள் முழுமையான விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை உருவாக்க GD France திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 30 நிலையங்கள், 2026-க்குள் 50-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உருவாக்கப்படும். பிரான்ஸ் வாடிக்கையாளர்களுக்காக மூன்று ஆண்டுகள் வழக்கமான உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், அறிமுக சலுகையாக 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hero MotoCorp France launch, Hunk 440 motorcycle specs, Hero MotoCorp European expansion, Euro 5+ compliant bikes, Hero MotoCorp GD France partnership, Hunk 440 price in France, Hero MotoCorp global strategy, A2 segment motorcycles Europe, Hero MotoCorp warranty France, Hero MotoCorp Paris debut