Hero Glamour பைக்கின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
Hero Glamour பைக்கின் புதிய வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய Hero MotoCorp நிறுவனம் தயாராகி வருகிறது.
புதிய வெர்ஷன் பைக் அறிமுகம்
இந்த புதிய பைக்கானது Hero Glamour 125 X என்கிற பெயரில் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு செய்தி பதிவின் படி இந்த பைக்கில் Cruise Control வசதி வழங்கப்படுகிறது.
அப்படியென்றால், இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த பைக் ஒன்றில் இந்த வசதி வழங்கப்படுவது முதல் முறையாகும்.
அதோடு இந்த பைக்கில் முழு Digital color TFT instrument cluster வசதியும், LED Headlamp வசதியும் உள்ளது. இதனை தவிர Eco, Road மற்றும் Power என்ற மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன.
இதில் வழங்கப்படும் 124.7 cc single cylinder air cooled engine ஆனது 10.7 பிஹெச்பி பவர் மற்றும் 10.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, 5 Speed Gear Box கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், விலையை பொறுத்தவரை ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக்கானது ரூ.95 ஆயிரம் முதல் 1 லட்ச என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |