OLA -க்கு போட்டியாக குறைந்த விலை Electric Scooter-யை களமிறக்கும் Hero?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை Electric Scooter மொடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த விலை Electric Scooter
இந்த ஆண்டு இறுதிக்குள் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை Electric Scooter மொடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Entry level பிரிவில், குறைந்த விலை மொடல், Mid range மொடல் உள்ளிட்டவைகளால் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது வாகனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதலில் குறைந்த விலை மொடல் Electric Scooter -யை அறிமுகம் செய்து அடுத்ததாக Mid range மொடல் Electric Scooter-யை ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் Ola நிறுவனம் மட்டும் தான் குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (S1 X) விற்பனை செய்கிறது.
இதனை தொடர்ந்து பஜாஜ் செட்டாக் (Bajaj Chetak) மற்றும் டிவிஎஸ் ஐகியூப் (TVS iCube) ஆகியவை அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |