உக்ரைன் வீரர்களின் லேசர் குண்டுவீச்சு: மொத்தமாக நொறுங்கிய ரஷ்ய டாங்கிகள்
உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கும் ரஷ்ய துருப்புகளுக்கு கடுமையான பதிலடியை அளித்து வருகின்றது உக்ரைன் துருப்பு.
உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு வெற்றி விழாவை ரஷ்யாவில் விளாடிமிர் புடின் முன்னெடுத்துள்ளார்.
தமது இராணுவத்தை பெருமையாக பேசிய அவர், தேவைப்பட்டால் தங்கள் உடலை கேடையமாக மாற்றி சக வீரர்களை காக்கும் சகோதர உள்ளம் கொண்டவர்கள் ரஷ்ய வீரர்கள் என புடின் பேசியுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நெருங்கும் ரஷ்ய துருப்புகளின் டாங்கிகள் அணிவகுப்பை லேசர் குண்டுவீச்சால் சிதறடித்துள்ளது உக்ரைன் வீரர்கள் குழு ஒன்று.
இதில், ரஷ்யாவின் டாங்கிகள் பல சுக்கலாக நொறுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஷ்ய துருப்புகள் கீவ் நோக்கி முன்னேறுவதை மேலும் தாமதப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய இராணுவம் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. இதுவரை, 30,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் டாங்கிகளை சிதறடிக்க உக்ரைன் இராணுவத்தினர் துல்லியமான திட்டமிடலுடன் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனாலையே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய துருப்புகளின் திட்டங்கள் நாளுக்கு நாள் மாறுபடுவதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.