விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Hero Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Hero Vida விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
அக்டோபர் 7, 2022 அறிமுகப்படுத்தப்பட்ட Hero Vida ஸ்கூட்டர் உள்நாட்டு சந்தையில் 1,00,000 யூனிட்களை விற்றுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இந்த சாதனையை எட்ட 34 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.
Vahan portal-ல் உள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 4 2025 அன்று வரை 1,00,195 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
2025 ஜூலை Hero Vida-வின் மாதனத்திர சிறந்த விற்பனையாக 10,505 யூனிட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஜூலை மதத்துடன் இதனை ஒப்பிடுகையில் 107 சதவீதம் அதிகமாகும். அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டடத்தில் 5076 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
அதேபோல் 2024-ஆம் ஆண்டில் பதிவான மொத்த விற்பனை எண்ணிக்கையை, 2025 ஜூலை மாதமே முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து ஜூலை மாதம் வரையிலும் 43,885 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hero Vida electric sales 100,000, Vida EV 100k milestone India, Hero electric scooter Vida performance, Vida VX2 monthly record sales, Hero MotoCorp Vida sales update, Vida electric two-wheeler growth, Hero Vida market share India EV, EV scooters 100k sales hero, Vida brand sales analysis 2025, Hero Vida retail registrations