ரூ.1.27 லட்சத்தில் Oben Rorr EZ Sigma எலக்ட்ரிக் மோட்டார்பைக் அறிமுகம்
முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான Oben Electric, தனது புதிய Rorr EZ Sigma மின்சார மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Oben Electric நிறுவனம், ஆரம்ப சலுகையாக ரூ.1.27 லட்சம் (ex-showroom) என்ற விலையில் வழங்குகிறது.
இந்த புதிய மொடல், பழைய Rorr EZ பிளாட்பாரத்தின் மேல் கட்டமைக்கப்பட்டதுடன், புதிய ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் மேம்பாடுகளை உள்ளடக்கியது.
புதிய அம்சங்கள்:
நகரப் போக்குவரத்தில் உதவும் Reverse Mode
5 இன்ச் TFT கலர் டிஸ்பிளே – Navigation, கால்/மெசேஜ் அறிவிப்புகள், Music Control
புதிய Electric Red நிறத்திலும், ஏற்கனவே உள்ள Photon White, Electro Amber, Surge Cyan நிறங்களுடன் வருகிறது
பயண வசதிக்காக redesign செய்யப்பட்ட இருக்கை
EMI ரூ.2,999-இல் தொடக்கம்
இரு பேட்டரி விருப்பங்கள்:
3.4kWh – ரூ.1.27 லட்சம் (அறிமுக சலுகை), பின் ரூ.1.47 லட்சம்
4.4kWh – ரூ.1.37 லட்சம், பின் ரூ.1.55 லட்சம்
தொழில்நுட்பங்கள்:
LFP Battery Tech – 50% அதிக வெப்பத்தன்மை, இரட்டிப்பு ஆயுள்
Top Speed: 95kmph, 3.3 வினாடிகளில் 0-40kmph வேகம்
Range: 175km வரை (IDC)
Fast Charging: 1.5 மணி நேரத்தில் 0-80% சார்ஜிங் வேகம்
பாதுகாப்பு அம்சங்கள்:
Unified Brake Assist, Driver Alert System, Battery Theft Lock
230mm வரை நீர் செலுத்தும் திறன்
ARX frame, 200mm மண்ணெடுப்பு உயரம், 7-ஸ்டெப் ரியர் மோனோஷாக்
தனிப்பட்ட App சலுகை:
1 ஆண்டு இலவச சந்தா, GPS-based ‘Find My Rorr, ride-tracking, geo-fencing, anti-theft
ரூ.2,999 கொடுத்து புக்கிங் செய்துகொள்ளலாம், டெலிவரி ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது. Amazon மூலமும் வாங்கலாம்.
8 ஆண்டு/80,000 கிமீ பேட்டரி வாரண்டி ரூ.9,999-க்குத் தனியாக வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Oben Rorr EZ Sigma, Oben Electric Bike Launch, Rorr EZ Sigma Price India, Electric Bike with Reverse Mode, Oben Rorr 2025 Features, Electric Red Oben Rorr, Oben Bike EMI Options, Rorr EZ Sigma Amazon Booking, Oben Electric App Features, LFP Battery Electric Bike