Hero XPulse 200 பைக்கின் Dakar Edition இந்தியாவில் அறிமுகம்.., விலை எவ்வளவு?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் Hero XPulse 200 4V Pro Dakar Edition இந்தியாவில் அறிமுகம் செய்ய்ய்யப்பட்டுள்ளது.
Hero XPulse 200 4V Pro Dakar Edition
ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) பைக் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் ஸ்பெஷல் எடிசன் (Special Edition)-கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் புதிய ஸ்பெஷல் எடிசனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்பின் Adventure ரக பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) இந்தியாவில் விலை குறைவான Adventure பைக்காக உள்ளது.
இந்நிலையில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் டக்கார் எடிசன் (Dakar Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை ரூ.1.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இந்த டக்கார் எடிசன் (Dakar Edition) பைக்கானது ஆஃப்-ரோடு (off-Road) பயணங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் உள்ள மாற்றம் என்னவென்றால் முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது 250மிமீ பயணத்துடன் அட்ஜெஸ் செய்யக்கூடியதாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக பைக்கிற்கு 270 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்க உதவுகிறது. அதேபோல இதில் 3 ஏபிஎஸ் (ABS ) மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |