முழு சார்ஜில் 130 கிமீ வரை ரேஞ்ச்.., ஓலாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
வார்ட்விசார்டு இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் (Wardwizard Innovations and Mobility Limited) நிறுவனம் புது மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
Joy e-bike அறிமுகம்
வார்ட்விசார்டு இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் (Wardwizard Innovations and Mobility Limited) நிறுவனமானது ஜாய் இ-பைக் (Joy e-bike) எனும் பிராண்டின் கீழ் நீமோ (Nemo) என்னும் புது மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக விலை ரூ. 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதற்கான புக்கிங்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500W திறன் கொண்ட Electric motor உள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 130 கிமீ வரை ரேஞ்ச் தரும். இதில், 72V - 40Ah திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது, லித்தியம் அயன் என்எம்சி வகை பேட்டரி ஆகும். இதனை முழு சார்ஜ் செய்ய 2.8 யூனிட்டுகள் செலவாகும். இதனால், ஒரு கிமீ தூரம் பயணிக்க வெறும் 17 பைசா மட்டுமே செலவாகும்.
குறிப்பாக இந்த ஸ்கூட்டரானது அதிகபட்சமாக 150 கிலோ வரையில் எடையை தாங்கும். மேலும், ஈகோ (Eco), ஸ்போர்ட் (Sport) மற்றும் ஹைப்பர் (Hyper) ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு (Top speed) மணிக்கு 65 கிமீ ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |