இஸ்ரேலுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்: வெளியான வீடியோ ஆதாரம்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாஹ் அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் இடையிலான போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே-வை (Ismail Haniyeh) இஸ்ரேலிய ராணுவம் கொலை செய்தது.
மேலும் அதற்கு சற்று முன்னதாக சற்று முன்னதாக பெய்ரூட்டில் லெபனானின் ஈரான் ஆதரவு போராளி குழுவின் தளபதி Fuad Shukr-வையும் இஸ்ரேலிய படைகள் கொலை செய்தனர்.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் களமிறங்கியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில் 20 கிலோ மீட்டர் இஸ்ரேலின் உள் பகுதி வரை புகுந்து லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை இஸ்ரேல் உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளது, அதில் ட்ரோன்கள் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே விழுந்து நொறுங்குவதை பார்க்க முடிகிறது.
? More footage shows Hezbollah drones hitting civilian areas in Israel
— i24NEWS English (@i24NEWS_EN) August 6, 2024
? Credit: Clause 27A of Israel's Copyright Law pic.twitter.com/7AQZJkZ7Kt
இந்த தாக்குதல் இஸ்ரேலிய படைகளின் இருப்பிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அவை மக்கள் குடியிருப்பு பகுதியை தாக்கியதில் குடிமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலர் மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |