இஸ்ரேலுடன் நேருக்கு நேர்... போருக்கு தயார்: பொறுமை காக்க வலியுறுத்தும் உலக நாடுகள்
இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ள நிலையில், இரு தரப்பும் பொறுமை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக நாடுகள் முன்வைத்துள்ளன.
ஹிஸ்புல்லா படைகள்
லெபனானின் Kiryat Bialik பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தீவிர தாக்குதலை முன்னெடுத்ததன் பின்னர் ஹிஸ்புல்லா படைகள் தங்களின் முடிவை அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக ஹிஸ்புல்லா படைகளுடன் நீடித்து வந்த மோதலானது, இஸ்ரேல் போர் விமானங்கள் முன்னெடுத்த மிக மோசமான தாக்குதலை அடுத்து தீவிரமடைந்தது. இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுத்தது.
காஸா போருக்கு பின்னர் ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் மிக மோசமான தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் இந்த தீவிர போக்கானது, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் António Guterres-ஐ தலையிட வைத்தது.
லெபனான் இன்னொரு காஸா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தளபதி உட்பட 44 பேர்கள் கொல்லப்பட்டு,
ஞாயிறன்று இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்ட போது ஹிஸ்புல்லா படைகளின் துணைப் பொதுச் செயலாளர் நைம் காசிம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
எந்த அச்சுறுத்தலும் தடுக்காது
எந்த அச்சுறுத்தலும் தங்களை தடுக்காது என குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து இராணுவ சாத்தியக்கூறுகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார். லெபனான் எல்லையில் இஸ்ரேல் போர் விமானங்கள் வட்டமிட, 100,000 மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் போர் வேண்டாம் என்ற முடிவுக்கு லெபனான் அரசியல்வாதிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கம்போல ஹிஸ்புல்லாவுக்கும் லெபனானுக்கும் எதிராக பேசியுள்ளார்.
ஹிஸ்புல்லாவை நிலைகுலைய செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, ஹிஸ்புல்லா இன்னும் சூழலை புரிந்துகொள்ளவில்லை என்றால், நாங்கள் புரிய வைப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |