மோசமான தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல்... பதிலுக்கு கடுமையாக தாக்கிய லெபனான்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் மோசமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்த நிலையில், பதிலுக்கு ஹிஸ்புல்லா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் தொடரும்
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. சுமார் 290 இலக்குகளை சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் பாடசாலைகளை மூடியதுடன் பொதுமக்கள் கூடவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து பல எண்ணிக்கையில் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் இரவு முழுவதும் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன.
இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ராக்கெட்டு மற்றும் ஏவுகணைகள் நேரடியாக கட்டிடங்களை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் சில பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
லெபனான் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருவதால், Ramat David விமானத்தளம் மீது டசின் கணக்கான ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் முதல் முறையாக இஸ்ரேலுக்குள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
மிக மோசமான நிலை
லெபனான் தலைநகரின் புறநகர் பகுதியில் ஹிஸ்புல்லா தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டவர்களில் மூத்த தலைவர் இப்ராஹிம் அகில் மற்றும் மற்றொரு தளபதி அஹ்மத் வஹ்பி உட்பட 16 உறுப்பினர்கள் பலியானதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இப்ராஹிம் அகில் மற்றும் மூத்த தளபதிகளின் மறைவிடத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்புடைய தாக்குதலில் மூன்று குழந்தைகளும் ஏழு பெண்களும் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. மேலும், 2006 போருக்குப் பிறகு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும்,
ஹமாஸ் படைகள் தாக்குதலை முன்னெடுத்த அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 740 ஐத் தாண்டியுள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |