லெபனானில் ஹிஸ்புல்லா தாக்குதலில் 6 இஸ்ரேலிய வீரர்கள் பலி
தெற்கு லெபனானில் நடந்த சண்டையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லைக்கு அருகே நடந்த இந்த சண்டையில் இஸ்ரேலின் 6 ராணுவ வீரர்கள் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான இஸ்ரேலிய ராணுவத்தின் அறிக்கையில், லெபனானுக்கு செப்டம்பர் 30 ஆம் திகதி அனுப்பியதில் இருந்து இதுவரை, 47 இஸ்ரேலிய துருப்புகள் ஹிஸ்புல்லாவுடனான போரில் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் எந்த தளர்வும் இருக்காது என்று கூறியதையடுத்து ராணுவத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |