இஸ்ரேல் பயம்... லெபனானில் இருந்து ரகசியமாக தப்பிச் சென்ற ஹிஸ்புல்லா தலைவர்
ஹிஸ்புல்லா படைகளின் துணை பொதுச்செயலாளர் நைம் காசிம் இஸ்ரேலின் படுகொலை அச்சுறுத்தல்களுக்கு பயந்து லெபனானில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் இருந்து ஈரானுக்கு
ஹிஸ்புல்லா படைகளின் உயர்மட்ட தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது உறவினரான ஹஷேம் சஃபிதீனை திட்டமிட்டு இஸ்ரேல் படுகொலை செய்துள்ள நிலையில், துணை பொதுச்செயலாளரான நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தீவிரத் தாக்குதல்களுக்குப் பிறகு சஃபிதீன் என்ன ஆனால் என்பது தொடர்பில உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஹசன் நஸ்ரல்லா படுகொலைக்கு பின்னர், ஹிஸ்புல்லா படைகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் நைம் காசிம். மட்டுமின்றி, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதன் பின்னர், ரகசிய இடத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர்கள் பலர் மாற்றப்பட்டிருந்தனர்.
ஏவுகணைத் தாக்குதல்களை
ஆனால், உயர்மட்ட சந்திப்பு ஒன்றின் போதே, ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது உறவினரான ஹஷேம் சஃபிதீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். லெபனான் மோதலுக்கு ஒரே தீர்வு போர்நிறுத்தம் மட்டுமே என்று கூறியுள்ள நைம் காசிம்,
இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்களை விரிவுபடுத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். செப்டம்பர் 27ம் திகதி லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்குப் பிறகு காசிம் மூன்று உரைகளை ஆற்றியுள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து நைம் காசிம் தற்போது உயர்மட்ட அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |