லெபனான் போர் நிறுத்த வரைவு: அமெரிக்கா எல்லை மீறுவதாக ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் போர் நிறுத்த வரைவு லெபனான் இறையாண்மையை அவமதிப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம்
இஸ்ரேல்-லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த வரையறைகள் லெபனான் இறையாண்மையை அவமதிப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.
லெபனான் அரசு தன்னிச்சையாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் நிபந்தனைகளை அமெரிக்கா கட்டளையிட முயல்வதன் மூலம் தனது எல்லைகளை மீறுவதாகவும் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறினால் உடனடியாக உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் காசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக நகர ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5 அடிப்படை தேவைகளை காசிம் பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி, தாக்குதலை நிறுத்துதல், லெபனான் எல்லையில் இருந்து முழுமையாக வெளியேறுதல், தடுப்பு காவலில் இருக்கும் அனைவரையும் விடுவித்தல் போன்றவற்றை முன்வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |