லெபனானில் நிலைகுலைந்த ஹிஸ்புல்லாஹ்: பேஜர்கள் வெடித்ததில் 8 பலி, 2750 பேர் காயம்
லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வெடித்து சிதறிய பேஜர்கள்
லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு போராளிகள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலை குற்றம் சாட்டவில்லை என்றாலும், இதனால் தனது உறுப்பினர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் ஒப்புக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் லெபனான் சுகாதார அமைச்சகம் வழங்கிய தகவலில், 8 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், குறைந்தது 2,750 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.///
ஹிஸ்புல்லாஹ் எதிர்கொண்ட மிகப்பெரிய இழப்பு
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஹிஸ்புல்லாஹ் அதிகாரி ஒருவர் அடையாளம் வெளியிடாமல் அளித்த பேட்டியில், இஸ்ரேலுடன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் பேஜர்கள் வெடித்ததால் ஏற்பட்டுள்ள இழப்பு ஹிஸ்புல்லாஹ் எதிர்கொண்ட மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என்று தெரிவித்தார்.
மேலும் AP உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் திட்டமிட்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
AP தகவலின்படி, பேஜர்கள் வெடித்ததில் லெபனானின் பல பகுதிகளில் ஹிஸ்புல்லாஹ் குழு உறுப்பினர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
வெவ்வேறு அறிக்கைகள் வெவ்வேறு எண்ணிக்கையை குறிப்பிடுவதால், காயங்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெளிவாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |