உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருப்பதை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
ரகசிய கேமராக்கள் தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா வடிவங்களிலும் வருகிறது.
இதன் காரணமாக பெண்கள் பொது இடங்களில் துணி மாற்றும்போதோ அல்லது பொது குளியலறை பயன்படுத்தும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நிறைய இடங்களில் நமக்கே தெரியாமல் கேமராவை பொருத்தி இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
ரகசிய கேமராக்கள், பொதுவாக அறையின் கதவுகள், மின்விளக்கு, உடைகளை வைக்க பயன்படுத்தபடும் ஹேங்கர், பூச்செண்டுகள் வைக்கப்பட்டுள்ள குவளைகள் என நாம் அதிகம் கவனம் செலுத்தாத இடங்களில் வைக்கப்பட்டிருக்கலாம்.
அவற்றை சில எளிய வழிகளின் மூலம் கண்டறியலாம். நீங்கள் தனியார் விடுதிகளில் தங்கினால், அறையில் உள்ள விளக்குகளை அனைத்துவிட வேண்டும். ரகசிய கேமராக்களில் இருக்கும் எல்.இ.டி விளக்கு ஒளிரும் என்பதால், இருளில் அது இருக்கும் இடத்தை உங்களால் கண்டறிய முடியும்.
துணிக்கடையில் உடை மாற்றும் அறையை பயன்படுத்த நேர்ந்தால், அங்குள்ள கண்ணாடியிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் விரலை கண்ணாடியின் மீது வைக்கும்போது, விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் இடையே இடைவெளி இல்லை என்றால் அங்கு ரகசிய கேமரா உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கேமராக்களை கண்டறிய பல்வேறு மொலைப் ஆப்-கள் செயலில் உள்ளன. அதுபோன்ற சில செயலிகள் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம் என்பதால், அதிலும் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்துகிறது சைபர் காவல்துறை.
உங்கள் மொபைல் போனில் நீங்கள் இருக்கும் அறை முழுவதும் வீடியோ எடுங்கள், எடுத்த பின்னர் அந்த வீடியோவை ரன் செய்து பாருங்கள் அப்படி கேமரா இருந்தால் அந்த வீடியோவில் உங்களுக்கு சிகப்பு அல்லது வெள்ளை கலர் லைட் எரிவதை கணடறியலாம் அப்படி இருந்தால் கேமரா இருப்பது உறுதி.