WhatsAppல் Last Seen நேரத்தை மற்றவர்கள் பார்க்காமல் மிக எளிதாக மறைப்பது எப்படி?
WhatsApp பயன்படுத்துபவர்கள் பலருக்கும் பிடிக்காத ஒரு விடயம் என்றால் அது 'Last Seen' என்ற ஒன்று தான்.
இது நாம் எப்போது கடைசியாக WhatsApp-ஐ பயன்படுத்தினோம் என்று நம் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு வசதி.
இதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
WhatsApp Settings பகுதியில் உள்ள Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதன் உள்ளே Privacy என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
Privacy பகுதியில் முதல் வசதியாக Last Seen என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
இதில் மூன்று வசதிகள் இருக்கும். Everyone, My Contacts, Nobody என்று. அதில் Nobody என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இனி யாராலும் நீங்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்துனீர்கள் என்பதை பார்க்க முடியாது.
அதே போல உங்களாலும் உங்கள் நண்பர்கள் கடைசியாக எப்போது WhatsApp-ஐ பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.