7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள முக்கிய தகவல்
ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவரின் முடிவுக்காக காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளித்த தகவலில், எழுவர் விடுதலை செய்வது குறித்து, தமிழக சட்டசபை தீர்மானத்தை, தமிழக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார்.
அவர் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது . இந்த நிலையில் தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இருந்து விரைவாக விடுவிக்க கோரி 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என தெரிவித்துள்ளனர்.