உச்ச கட்ட போதை! வாகனத்தை தடுத்த பொலிஸாரை கார் பேனட்டில் ஏற்றிக் கொண்டு 20கிமீ ஓட்டிய இளைஞர்
நவி மும்பையில் போதையில் வந்த கார் ஓட்டுநரை தடுத்த பொலிஸை கார் பேனட்டில் ஏற்றிக் கொண்டு 20 கிமீ ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது.
வாகனத்தை தடுத்த பொலிஸ்
நவி மும்பையிலுள்ள கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதால் குறிப்பிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.
அப்போது 37 வயதான காவலர் நாயக் மற்றும் சித்தேஷ்வர் மாலி(Siddeshwar Mali) ஆகியோர் பந்தோபஸ்த் பணியிலுள்ள போது மதியம் 1.30 மணியளவில் வாஷி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
@twitter
அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்கள் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த போது, அங்கு 22 வயது கார் உரிமையாளர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார்.
20 கிமீ பயணம்
அங்கிருந்த இரண்டு பொலிஸாரும் அந்த கார் டிரைவரைச் சோதனை செய்ய முற்பட்டபோது, அவர் மாலியின் மீது வாகனத்தை ஓட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, மாலி வாகனத்தின் பானட்டை பிடித்து நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது கார் டிரைவர் வண்டியை நிறுத்துவதற்கு பதிலாக, பேனட்டில் தொங்கிய பொலிஸார் மாலி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, அந்த இடத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள கவண் பாட்டாவுக்கு வண்டியை ஓட்டி சென்றுள்ளார்.
@twitter
அவர் காரை வேகமாக ஓட்டியதால், பொலிஸார் வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் வேறு சில காவலர்கள் ஓட்டுநரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதை மருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
A traffic cop clings to the bonnet of the car at Mata Rani chowk in Ludhiana. Driver was using a mobile phone while driving, on being stopped by the cop at naka, the driver tried to flee leaving a cop at risk.@thetribunechd pic.twitter.com/Kz6D73e9E5
— Nikhil Bhardwaj (@NikhilLudhiana) April 14, 2023
22 வயதான ஆதித்யா பெம்டே என்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.