ஒழுக்கமானவர் போல காட்டி கொண்ட பள்ளி இசை ஆசிரியர்! 2 வருடம் கழித்து தெரிந்த அவரின் நிஜ முகம்
அமெரிக்காவில் இசை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் செய்த தவறு 2 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமாகியுள்ளது.
டியூபேஜ் கவுண்டியை சேர்ந்தவர் நாதன் பிரம்ஸ்டெட் (42). இவர் பள்ளிக்கூடம் ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் 17 வயதான மாணவியிடம் அவர் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். மாதக்கணக்கில் இவ்வாறு அவர் நடந்து கொண்டிருந்தார்.
மிக ஒழுக்கமானவர் போல தன்னை நாதன் காட்டி கொண்ட நிலையில் அவரின் குற்றம் வெளியில் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியும் இது குறித்து உடனடியாக புகார் எதுவும் கொடுக்காத நிலையில் கடந்தாண்டு தான் இது குறித்து வாயை திறந்தார்.
இதையடுத்து நீண்ட விசாரணைக்கு பிறகு பொலிசார் நாதனை கைது செய்தனர். இதற்கு பிறகே தனது வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாதனுக்கு ஜாமீன் தொகையாக $500,000 நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.